Tintin,Asterix போன்ற தொடர்களை விரும்பி வாசிப்பவரா நீங்கள்..?
அதே போன்ற கதைக் களத்தில் சொல்லப்பட்ட த பேமஸ் ஃபைவ் சித்திரக் கதைத் தொடரை வாசிக்க பிரியப்படுகிறீர்களா..?
இதோ உங்களுக்கான கதவை அகலத் திறந்து வரவேற்கிறது ரங்லீ நிறுவனம்!
ஆங்கில எழுத்தாளர் எனிட் பிளைட்டன் என்பவரால் 1942-ல் உருவாக்கப்பட்ட கதைத் தொடர் இது..
முழுக்க,முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை வரிசை இது!
ஜூலியன்,டிக்,ஆன்னி,ஜார்ஜ் மற்றும் அவர்களின் செல்ல நாயான டிம்மி இவர்கள் தான் இந்தத் தொடரின் நாயகர்கள்.
இத் தொடரின் பெரும்பாலான கதைக் களம் குழந்தைகளின் விடுமுறைக் காலங்களிலேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் சாகசமான இந்த பொக்கிசத் தீவும் அது போன்றதொரு விடுமுறை நாட்களிலேயே நிகழ்கிறது.
டிக்,ஜூலியன்,ஆன்னி மூவரும் தங்களின் அத்தை வீடான கிரீன் இல்லத்திற்கு விடுமுறையைக் கழிக்க வருகிறார்கள்.அங்கே வசிக்கும் அவர்களுடைய வயதை ஒத்த ஜார்ஜினாவோடு நட்பு கொள்கிறார்கள்.ஜார்ஜூக்கு டிம்மி என்றொரு நாய் உற்ற தோழனாய் இருக்கிறது.டிம்மியை ஆன்னி,டிக் மற்றும் ஜூலியன் ஆகியோரும் சக தோழனாய் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பேச்சு வாக்கிலே ஜார்ஜூக்கு சொந்தமான கிரீன் ஐலேண்ட் ஒன்று இருப்பதாக தெரிந்து கொண்டு அந்த ஐலேண்டை பார்க்க ஆசைப்படுகிறார்கள் மூவரும்.
ஜார்ஜூம் அதற்கு ஒத்துக் கொண்டு தேவையான உபகரணங்களோடு அந்த தீவுக்கு பயணப்படுகிறார்கள்.
அந்த தீவை அடையும் அவர்கள் அங்கே கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கப்பல் ஒன்றைக் காண்கிறார்கள்.
குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனமான குணத்தால் கப்பலை ஆராயும் அவர்களுக்கு ஒரு புதையல் வரைபடம் கிடைக்கிறது.
அதே சமயம் இவர்களைப் பின் தொடர்ந்து வரும் இரண்டு போக்கிரிகள் வரைபடத்தை கொடுக்கச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.
குழந்தைகள் தப்பித்தார்களா?
புதையல் மீட்கப்பட்டதா?
போக்கிரிகள் என்னவானார்கள் என்பன போன்ற வினாக்களுக்கு இந்த பொக்கிசத் தீவின் இறுதி பக்கங்கள் உங்களுக்கு விடையளிக்கக் காத்துள்ளன!
தெளிவான அழகான சித்திரங்கள் இதழுக்குப் பெரும் பலம்!
அதே போலவே அன்பு நண்பர் கே.வீ.கணேஸ் அவர்களின் எளிய மொழி பெயர்ப்பு கதையோட்டத்தில் இணைந்து பயணிக்க உதவுகிறது..!
குறிப்பாக நாய் டிம்மியின் மனவோட்ட வசனங்கள் அருமையாக உள்ளது!
கதையின் ஆசிரியர் எனிட் பிளைட்டன் பிரபலமான குழந்தை எழுத்தாளர்களில் ஒருவர்.
இவரின் புத்தகங்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று சாதனை படைத்துள்ளது!
இவரின் எழுத்து 700 புத்தகங்களாவும்,2000 சிறு கதைகளாகவும் விரிந்துள்ளது!
தற்போது 75 வயதை கடந்துள்ள இந்த பெண்மணியின் எழுத்துக்களில் அவருக்கு மிகவும் பிடித்த தொடராக இந்த பேமஸ் ஃபைவை குறிப்பிடுகிறார்!
இந்தத் தொடர் உலகெங்கும் திரைப்படங்களாகவும்,தொலைக் காட்சி தொடர்களாகவும் வெளிவந்து நேய ரசிகர்களின் மனங்கவர் தொடர்களாக இன்றளவும் இருந்து வருகிறது!
Reviews
There are no reviews yet.