வெளியூர் வெளி நாட்டில் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை, ரூ 100 செலுத்தி இணையதளத்தில் படித்துக் கொள்ளலாம். படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்
அமானுஷ்ய நாவல் உலகின் முடிசூடா மன்னன் இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களின் எழுத்து முதன் முதலாக சித்திரக் கதை வடிவில்..
ஆனந்தன்,மகாலட்சுமி தம்பதியினருக்கு அழகான செல்ல மகள் பவித்ரா..
ஆங்கில மருத்துவமே கைவிட்ட ஒரு கொடிய நோய் பவித்ராவை பீடித்துக் கொள்ள,அவளது மருத்துவச் செலவிற்கே அனைத்து சேமிப்பும் கரைந்து போகிறது..
தவமிருந்து பெற்ற ஒரே மகளை காலன் கண் முன்னே கரம் பிடித்து அழைத்துச் செல்வதைக் காணச் சகியாத அந்த தம்பதி தற்கொலை முடிவிற்கு வருகிறார்கள்..
சதுரகிரி மலையின் விபூதி அடிகளாரால் கொணரப்பட்ட பஞ்சாமிர்தத்தில் விஷத்தைக் கலந்து குழந்தை பவித்ராவுக்கு ஊட்டி விட்டு இவர்களும் சாப்பிட்டு விட்டு மரண தேவனின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்..!
இவர்களின் எண்ணம் இவ்வாறிருக்க, சித்தரின் எண்ணம் வேறாகவல்லவோ இருக்கிறது.!?
சயனைட் விஷம் அமுதாக மாறிவிட்டதா?
குழந்தை பவித்ரா குதூகலமாய் சுற்றிச் திரிகிறாளே?
ஆனந்தனும்,மகாலட்சுமியும் கூட பூரண நலமாய் இருக்கிறார்களே?!
இது எப்படி நிகழ்ந்தது?
எதனால் நிகழ்ந்தது?
ஈசனின் திருவருளா?
சித்தர் மலைச் சாமிகளின் பாஷாண மூலிகை மர்மங்களா?
பாஷாண லிங்கம் முதல் பகுதி பரபரவென்று பறக்கிறது!
கதை: இந்திரா சௌந்தர் ராஜன்
ஓவியம்: நெல்ஸன்
Reviews
There are no reviews yet.