ரங்லீ காமிக்ஸின் உயிர் மூச்சாக இருக்கும் சந்தாதாரர்களால், இந்த ப்ராஜக்ட் சாத்தியமாகியிருக்கிறது. உங்களை மகிழ்விக்க, அப்பப்பொழுது சில அப்டேட்ஸ் வழங்க திட்டமுட்டுள்ளோம்.. அதன் வரிசையில், ‘பென்சிலிங்’ எனும் வரைகலை வேலை துவங்கியுள்ளது – அதில் ஒரு பக்கத்தை உங்கள் பார்வைக்கு வழங்க மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பி கு: பொதுவெளியில் பகிர வேண்டாமே, ப்ளீஸ்? இது சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறப்பு ஏற்பாடு!
முக்கிய பி கு: ஒரு பக்கம் ரெடி ஆகிவிட்டதே.. இனி விரைவில் புத்தகத்தை எதிர்பார்க்கலாம் என்று நினைத்து விடாதீர்கள்.. இன்னும் கிணறு இருக்கிற இடத்திற்கே நாம் போகவில்லை.. அதற்கு பின் தான் அதை தாண்ட வேண்டும்!!!

முதல் பக்கத்தை பார்த்தே, எந்த நாவல் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யப்பட வைக்கும் பரிசு உண்டு!