தங்கம் ஐயாவின் பொன்னியின் செல்வன் – நான்காம் புத்தகம்

அன்புள்ள காமிக்ஸ் இரசிகர்களே, நம் தங்கம் ஐயாவின் பொன்னியின் செல்வன் சித்திரக் கதையின் நான்காம் புத்தகம் இன்னும் இரு வாரங்களில் வெளி வர உள்ளது. எப்பொழுதும் போல் அவரது புத்தகத்தை முன் பதிவு செய்து தமிழ் சித்திரக் கதையுலகில் இம்மாதிரியான முயற்சிகளை பேணிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். - ஓகாமிக்ஸ்

கேம்ப் ஃபயர் காமிக்ஸின் “கிருஷ்ணா”

"Kalyani Navyug Media Private Limited" என்ற டெல்லியில் இயங்கி வரும் நிறுவனம் "Campfire" என்ற பெயரில் அறுவதுக்கும் மேற்பட்ட காமிக்ஸ்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழாக்கம் செய்து முதலில் "அப்துல் கலாமின் வாழ்கை வரலாறு" என்ற சித்திரக் கதையை சென்ற வருடம் வெளியிட்டிருந்தார்கள். தற்பொழுது அவர்களது அடுத்த தமிழ் புத்தகமாக"ஶ்ரீ கிருஷ்ணா" என்ற சித்திரக்கதையை வெளியிட இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களது அன்பான ஆதரவை பேணிடும்படி தாழ்மையுடன்  கேட்டுக்கோள்கிறோம். - ஓகாமிக்ஸ்